search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக போலீசார்"

    காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்படுகின்றன. ஒரு லத்தி ரூ.165 விலையில் வாங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. #TNPoliceDepartment
    சென்னை:

    தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது லத்திகள் பயன்படுத்துகிறார்கள். இதேபோல் விசிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் லத்திகள், விசில்கள் பழையதாகி விட்டன. இதையடுத்து போலீசாருக்கு புதிதாக லத்திகள், விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்படுகின்றன.

    ஒரு லத்தி ரூ.165 விலையில் வாங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.17 லட்சம் செலவில் 10 ஆயிரத்து 326 லத்திகள் வாங்கப்படுகிறது.



    இதேபோல் ரூ.13 லட்சம் செலவில் 26 ஆயிரத்து 196 விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதிய லத்திகள், விசில்கள் அனைத்தும் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு போலீசாருக்கு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிதாக வாங்கப்படும் லத்தி மற்றும் விசில்கள் மாநிலம் முழுவதும் உள்ள போலீசாருக்கு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.

    பொதுவாக பணியின்போது விசில்கள் பயன்படுத்துவது இல்லை. செல்போன்கள் வந்த பிறகு விசில் பயன்பாடு குறைந்து விட்டது. செல்போன் மூலம் சக போலீசாரை விரைவில் தொடர்பு கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNPoliceDepartment
    டெல்லி திகார் சிறையில் கைதிகளை தாக்கிய விவகாரம் தொடர்பாக தமிழக போலீசார் 53 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. #TiharJail #TNPolice #CBI
    புதுடெல்லி:

    டெல்லி திகார் சிறையில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 21-ந் தேதி உயர் பாதுகாப்பு சிறையில் உள்ள 18 கைதிகளிடம் செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் 52 போலீசார் உயர் பாதுகாப்பு அறையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கலவரமாக மாறியது. இதில் 18 கைதிகள் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில், ஒருவரான சின்மய் கனோஜியா என்ற கைதி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, உண்மை கண்டறியும் குழு அமைக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் கைதிகளை பரிசோதனை செய்தனர். பின்னர் இதுபற்றி அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் கைதிகள் தாக்குதலுக்கு ஆளானதால் காயம் அடைந்தனர் என கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து உண்மை கண்டறியும் குழு இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி உள்ளிட்ட 53 போலீசார் மீது சி.பி.ஐ. நேற்று வழக்குப்பதிவு செய்தது. சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி ஏற்கனவே தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கைதிகளும் தங்களை தாக்கியதாக, திகார் சிறை அருகே உள்ள ஹரிநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியும் ஒரு புகார் அளித்தார். அதில் திகார் சிறையில் கடந்த நவம்பர் 21-ந் தேதி போலீசார் சோதனை செய்தபோது, வார்டு 6-ல் ‘சி’ பிளாக் பிரிவில் உள்ள காஷ்மீர் பயங்கரவாதிகள் ஆதிஷம், ஹக்கீம் உள்ளிட்ட பல கைதிகள் தங்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாகவும், அவர்கள் பாகிஸ்தானை ஆதரித்து கோஷங்கள் எழுப்பினர்.

    சிறையில் அபாய மணி அடித்த பிறகு சிறப்பு காவலர்கள் வந்து சம்பந்தப்பட்ட கைதிகளை தடுத்து மீண்டும் சிறையில் அடைத்தனர். கைதிகள் நடத்திய தாக்குதலில் சில போலீசாரும் காயம் அடைந்துள்ளனர் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டது. தற்போது இந்த வழக்கும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.  #TiharJail #TNPolice #CBI
    கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சியில் திரண்ட கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதற்கு உயர் அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #KarunanidiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் நேற்று வைக்கப்பட்டிருந்தபோது லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தனி வழியும், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த ஒரு வழியும் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வந்து அஞ்சலி செலுத்தும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது.

    அவர் சென்றதும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியை பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் ஆக்கிரமிக்க தொடங்கினர்.

    மேலும் பன்னோக்கு மருத்துவமனை வழியாகவும் ராஜாஜி அரங்குக்குள் ஏராளமான தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி குதித்து உள்ளே புகுந்தனர்.

    இப்படி அத்துமீறி வந்தவர்களை போலீசாரால் தடுக்க முடியவில்லை.

    முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த மைக்கில் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட்டத்தினர் கட்டுக்கடங்காமல் முன்னேறி வந்தனர்.


    அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது சிலர் ஏறி நின்று கொண்டனர். அவர்களையும் மா.சுப்பிரமணியன் எச்சரித்து கீழே இறங்க வைத்தார்.

    அத்துமீறி வந்தவர்களை பார்த்து வரிசையில் வந்து கொண்டிருந்தவர்களும் தங்கள் இஷ்டத்தக்கு செல்ல ஆரம்பித்தனர். இப்படி நுழைந்தவர்களை சமாளிக்க ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்தாலும் அவர்களால் கட்சி தொண்டர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள முடியவில்லை. மேலும் அத்துமீறி நுழைந்தவர்கள் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடம் வரை சென்று சூழ்ந்து நின்று கொண்டனர்.

    நுழைவுவாயில் படிகள் அனைத்திலும் ஆக்கிரமித்து உட்கார்ந்து கொண்டனர். இவர்களை அகற்ற முடியாமல் போலீசார் திணறினார்கள்.

    நிலைமை மோசமான பின்புதான் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    இதேபோல் இறுதி ஊர்வலத்தின் போதும் அண்ணாசாலையில் இருந்து கடற்கரை சாலை வரை உள்ள பகுதிகளில் ரோடுகளில் நின்று கொண்டிருந்த தொண்டர்களை ஒழுங்குப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல் ஊர்வலத்தை தொடங்கி விட்டனர். இதனால் வழி நெடுகிலும் கடும் சிரமத்துக்கு இடையே ஊர்வலம் சென்றது.

    போலீஸ் உயர் அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததால் அஞ்சலி செலுத்த வந்த பலரும் சிரமம் அடைந்தனர்.

    இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த விசயத்தில் போலீசாரை குறை கூறக்கூடாது. அவர்கள் கால் கடுக்க நின்று பாதுகாப்பு கொடுத்தார்கள். தூக்கம் இன்றி, சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் 2 நாட்களாக கஷ்டப்பட்டார்கள். பெண் போலீசாரின் நிலைமை மிகவும் பரிதாபமானது.

    ஆனால் உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த தகுந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

    ராஜாஜி ஹாலில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டும், எதிர்க்கட்சி நடத்தும் கூட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்வார்களோ அதே போல்தான் காலை 11 மணி வரை நடந்து கொண்டனர்.

    நிலைமை மோசமான பிறகுதான் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக வந்து தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்த அலட்சியமும் உயிரிழப்புக்கு ஒரு காரணமாகும் என்றார். #DMK #Karunanidhi #KarunanidiFuneral
    ×